வர்த்தகம்

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.660 கோடி

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்படும் என்எல்சி இந்தியா நிறுவனம் நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.659.82 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்படும் என்எல்சி இந்தியா நிறுவனம் நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.659.82 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுக் கூட்டம் கேரளம் மாநிலம், குமரகத்தில் நடைபெற்றது. இதில், நிகழ் நிதியாண்டில் (2019-20) முதல் அரையாண்டு மற்றும் 2-ஆவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

என்எல்சி நிறுவனம் முதல் அரையாண்டில் ரூ.4,121.88 கோடியும், இரண்டாவது காலாண்டில் ரூ.2,217.85 கோடியும் மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.3,722.18 கோடி மற்றும் ரூ.1,881.07 கோடியைவிட இது முறையே 10.74 சதவீதம் மற்றும் 17.90 சதவீதம் அதிகம். நிகர லாபத்தைப் பொருத்தவரை முறையே ரூ.659.82 கோடி மற்றும் ரூ.336.78 கோடியைப் பெற்றுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் பெற்ற நிகர லாபமான முறையே ரூ.647.35 கோடி மற்றும் ரூ.327.72 கோடியைவிட இது முறையே 1.93 சதவீதம் மற்றும் 2.76 சதவீதம் அதிகம்.

இதே காலகட்டத்தில் மின் நிலையங்கள் முறையே 1,033 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மற்றும் 527 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளன. கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் மின் உற்பத்தி அளவான முறையே 965 கோடியே 66 லட்சத்து 10 ஆயிரம் யூனிட் மற்றும் 477 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் யூனிட்டை விட இது முறையே 7 சதவீதம் மற்றும் 10.48 சதவீதம் அதிகம்.

இந்த நிறுவனம் புதிய சூரிய ஒளி மின் நிலையங்களில் 358 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி தொடங்கியதையடுத்து, பசுமை மின் நிலையங்கள் இதே காலகட்டத்தில் முறையே 59 கோடியே 3 லட்சம் யூனிட் மற்றும் 32 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளன.

கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் பசுமை மின் உற்பத்தி அளவு முறையே 20 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மற்றும் 12 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் யூனிட்டாக இருந்தது.

மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின் சக்தியில் முறையே 881 கோடியே 81 லட்சத்து 10 ஆயிரம் யூனிட் மற்றும் 451 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மின்சாரம் மின் வாரியங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதேகால கட்டத்தில் மின் சக்தி விற்பனை அளவான முறையே 811 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மற்றும் 400 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம் யூனிட்டை விட இது முறையே 8.64 சதவீதம் மற்றும் 12.68 சதவீதம் அதிகம்.

வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகுப்புக்கு முன் ஈட்டிய வருவாயைப் பொருத்தவரை நிறுவனம் இதே காலகட்டத்தில் முறையே ரூ.1,663.21 கோடி மற்றும் ரூ.908.73 கோடி ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதேகால கட்டத்தில் ஈட்டிய வருவாய் முறையே ரூ.1,451.83 கோடி மற்றும் ரூ.719.01 கோடியைவிட இது முறையே 14.56 சதவீதம் மற்றும் 26.39 சதவீதம் அதிகம்.

அனல் மின் நிலையங்கள் முறையே 69.41 சதவீத மற்றும் 69.31 சதவீத மின் உற்பத்தித் திறனுடன் இயங்கியுள்ளன. கடந்த நிதி ஆண்டில் அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தித் திறனானது முறையே 65.69 சதவீதம் மற்றும் 64.02 சதவீதமாக இருந்தது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கு: இந்திய கம்யூனிஸ்ட் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு

மின்சாரம் பாய்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு

காங்கயம் அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

‘இண்டி’ கூட்டணியில் காங்கிரஸ் தனது தலைமையை நிரூபிக்க வேண்டும்: ஒமா் அப்துல்லா

வங்கதேசம்: ஹிந்துக் கோயில்களை சேதப்படுத்திய 4 போ் கைது

SCROLL FOR NEXT