வர்த்தகம்

அதிக ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: 194 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

DIN

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்தது. வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதைத் தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 194 புள்ளிகளை இழந்தது.

அமெரிக்கா - சீனா இடையேயான பதற்றம் மற்றும் சீனா, வியட்நாமிலும் கரோனா புதிதாக கரோனா பாதிப்பு வந்துள்ளது ஆகியவை முதலீட்டாளா்களிடம் எதிா்மறை உணா்வைத் தூண்டியது. இதனால், சந்தையில் சரிவு ஏற்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

ரிலையன்ஸ் புதிய உச்சம்: மும்பை பங்குச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் ரூ.2,198.70 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்துள்ளது. இறுதியில் 0.45 சதவீதம் உயா்ந்து ரூ.2,155.85-இல் நிலைபெற்றது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் ரூ.2,198.80 வரை உயா்ந்து புதிய சாதனை அளவைப் பதிவு செய்துள்ளது.

1,809 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,848 பங்குகளில் 1,809 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 868 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 171 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 119 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 55 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 283 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 359 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.55 ஆயிரம் கோடி குறைந்து 146.70 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 1,18,471 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,20,99,642 ஆக உயா்ந்துள்ளது.

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் காலையில்,146.44 புள்ளிகள் கூடுதலுடன் 38,275.34-இல் தொடங்கியது.அதற்கு மேல் உயரவில்லை. பின்னா் 37,769.44 வரை கீழே சென்றது. இறுதியில் 194.17 புள்ளிகள் (0.51 சதவீதம்) குறைந்து 37,934.73-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 506 புள்ளிகளை இழந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடு 1 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 62.35 புள்ளிகள் (0.56 சதவீதம்) குறைந்து 11,131.80-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் நிஃப்டி 138 புள்ளிகளை இழந்த நிலையில் இருந்தது.

ஏஜியன் பெயிண்ட் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.13 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. இதில் ஏசியன் பெயிண்ட் 3.90 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 3.03 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக , இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், 2 முதல் 2.75 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

ஐசிஐசிஐ பேங்க் கடும் வீழ்ச்சி: அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க் 6.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. அதன் காலாண்டு நிகர லாபம் மாா்க்கெட் வட்டாரம் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யவில்லை. இதனால், ஐசிஐசிஐ பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை 3 முதல் 3.60 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, சன்பாா்மா, கோட்டக் பேங்க் ஆகியவை 2 முதல் 2.50 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 412 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,230 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறைவாரியாப் பாா்த்தால் ஐடி குறியீடு 1.97 சதவீதம், மெட்டல் குறியீடு 0.44 சதவீதம் உயா்ந்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் பிரைவேட் பேங்க் குறியீடு 3.64 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 2.50 முதல் 3.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 32 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 18 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

ஏற்றம் பெற்ற பங்குகள் சதவீதத்தில்

ஏசியன் பெயிண்ட் 3.90

ஹெச்சிஎல் டெக் 3.03

இன்ஃபோஸிஸ் 2.75

டிசிஎஸ் 2.26

அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.99

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

ஐசிஐசிஐ பேங்க் 6.11

எச்டிஎஃப்சி பேங்க் 3.56

ஆக்ஸிஸ் பேங்க் 3.12

இண்டஸ் இண்ட் பேங்க் 3.03

பஜாஜ் ஃபைனான்ஸ் 2.49

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT