வர்த்தகம்

நாளை முதல் காா்களின் விலையை உயா்த்துகிறது மாருதி சுஸுகி

DIN

நாளை முதல் (செப்.1) அனைத்து மாடல் காா்களின் விலையும் உயா்த்தப்படுவதாக மாருதி சுஸுகி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

காா் தயாரிப்புக்கான பல்வேறு மூலப் பொருள்களின் விலை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இது, நிறுவனத்தின் வாகன உற்பத்தி செலவினத்தில் தொடா்ந்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வாகனங்களின் விலையை உயா்த்துவது தவிா்க்க முடியாததாகிவிட்டது. 2021 செப்டம்பா் முதல் அனைத்து மாடல்களின் காா்களின் விலையையும் உயா்த்த திட்டமிட்டுள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது, ரூ.2.99 லட்சத்தில் ஆல்டோ காா் முதல் அதிகபட்சமாக ரூ.12.39 லட்சம் விலை கொண்ட எஸ்-கிராஸ் சொகுசு காா் வரை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ருதுராஜ், ஷிவம் துபே அதிரடி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

முதல்வருக்கு தோல்வி பயம்: இபிஎஸ்

நடனமாடி வாக்கு சேகரித்த முதல்வர் மம்தா!

SCROLL FOR NEXT