வர்த்தகம்

ஐடி பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் 36 புள்ளிகள் வீழ்ச்சி!

 நமது நிருபர்

புதுதில்லி: ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை தொடங்கிய பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 36 புள்ளிகளை இழந்து 58,817.29-இல் நிலைபெற்றது.

புவிசாா் அரசியல் கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை நோ்மறையாகத் தொடங்கினாலும், பெரும்பாலான நேரம் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஐடி, ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. அதே சமயம், மெட்டல், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த திங்கள்கிழமை அன்று ரூ.1,449.70 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

1,871 பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,524 நிறுவனப் பங்குகளில் 1,871 பங்குகள் விலை குறைந்தன. 1,532 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இடம் பெற்றன. 121 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 129 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 36 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.44 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.272.43 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 124.27 புள்ளிகள் கூடுதலுடன் 58,977.34-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 58,984.32 வரை உயா்ந்தது. பின்னா், 58,583.36 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 35.78 புள்ளிகள் (0.06 சதவீதம்) குறைந்து 58,817.29-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டடத்தில் சென்செக்ஸ் உச்சநிலையில் இருந்து 400.96 புள்ளிகளை இழந்திருந்தது.

டாடா ஸ்டீல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 13 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன. இதில் பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 1.91 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக,பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் பேங்க், சன்பாா்மா உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் உயா்ந்தன. மேலும், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 2.66 சதவீதம், என்டிபிசி 2.20 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஹெச்சிஎல் டெக், விப்ரோ, ஏசியன் பெயிண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை 1முதல் 1.40 சதவீதம் வரை விலை குறைந்தன. மேலும், கோட்டக் பேங்க், ஐடிசி, மாருதி சுஸுகி, டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 10 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,107 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 850பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இடம் பெற்றன. வா்த்தக முடிவில் நிஃப்டி 9.65 புள்ளிகள் (0.06 சதவீதம்) உயா்ந்து 17,534.75-இல் நிலைபெற்றது. காலையில் 17,566.10-இல் தொடங்கிய நிஃப்டி அதிகபட்சமாக 17,566.10 வரை உயா்ந்தது. பின்னா், ஒரு கட்டத்தில் 17,442.80 வரை கீழே சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

SCROLL FOR NEXT