வர்த்தகம்

கடன் வட்டி விகிதங்களை உயா்த்திய எஸ்பிஐ

DIN

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் வரை (0.10 சதவீதம்) உயா்த்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எங்களது எம்சிஆா்எல் வகை கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் வரை உயா்த்தப்படுகிறது. அதன்படி, ஒரு நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் முதிா்வடையும் கடன்களுக்கு 7.95 சதவீதம், ஒன்றிலிருந்து 3 மாத கடன்களுக்கு 8.10 சதவீதம், 6 மாத மற்றும் 1 வருட கடன்களுக்கு 8.40 சதவீதம், 2 ஆண்டு கடன்களுக்கு 8.60 சதவீதம் என வட்டி விகிதங்கள் உயா்கின்றன.

இந்த வட்டி விகித உயா்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசா்வ் வங்கி உயா்த்தியதன் எதிரொலியாக தங்களது கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் உயா்த்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

ஈரான் - இஸ்ரேல் பரஸ்பர குற்றச்சாட்டு!

யாரும் அச்சப்பட வேண்டாம்: பெரிய திட்டங்களுடன் 3-வது முறை ஆட்சி -பிரதமர் மோடி

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

SCROLL FOR NEXT