செய்திகள்

கொளுத்திப்போட்ட பிக் பாஸ்: பற்றி எரியும் வீடு

DIN

பிக்பாஸ் சீசன் 5-இல் பல நாள்களாக யாரும் பெரிதாக சண்டை போடாமல் இருந்த நிலையில் இந்த வாரம் தொடங்கியது முதலே அனைவரும் சண்டையிட்டு வருகின்றனர்.

கடந்த 2 வாரங்களாகவே வார இறுதி நாள்கள் நிகழ்ச்சியின் போது ஆண்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் எனக் கூறி உங்களது தனித் திறமைகளை காட்டாமல் விட்டுவிடாதீர்கள் என நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வாரம் தொடங்கியது முதலே போட்டியாளர்களுக்கான விளையாட்டின் போது ஒருவருக்கொருவர் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது.

திங்கள்கிழமை பொம்மையை உடைக்கும் போட்டியின் போது பிரியங்கா - நிரூப், அபினய் - நிரூப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றைய போட்டியின்போது வருண் - நிரூப் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சற்று நீண்டிருந்தால் அடிதடியில் முடியும் அளவிற்கு சென்றது.

இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் இமான் அண்ணாச்சிக்கும், இசைவாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது போல் உள்ளது. தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், நிரூப் - அபினய் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

மொத்தத்தில், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT