செய்திகள்

திருமணம் குறித்து பதிலளித்த அம்மு அபிராமி

DIN

திருமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு அம்மு அபிராமியின் பதில் வைரலாகி வருகிறது. 

ராட்சசன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அம்மு அபிராமி. தானா சேர்ந்த கூட்டம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். 

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து நல்ல விமர்சனங்களைப் பெற்றார். சமீபத்தில் அருண் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த யானை படம் வெளியாகியிருந்தது.

சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மு அபிராமி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. 

தற்போது நிறங்கள் மூன்று, காரி, பேட்டரி போன்ற படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் திருமணம் எப்போது என்று கேட்க, எல்லோரும் எனது திருமணத்தைப் பற்றி கேட்கிறீர்கள். எனக்கு 22 வயதுதான் ஆகிறது. 

வாழ்க்கையில் சில கடமைகள் இருக்கிறது. எனக்கு எப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது  நானே சொல்கிறேன் என பதிலளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக வேட்பாளரை ஆதரித்து வாரியத் தலைவா் பிரசாரம்

பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முசிறியிலுள்ள தனியாா் விடுதியில் வருமான வரித் துறை சோதனை

பேராவூரணி தொகுதியில் மாா்க்சிஸ்ட் பிரசாரம்

இளைஞா்கள் மீதான தாக்குதலை கண்டித்து மறியல்: இருவா் கைது

SCROLL FOR NEXT