துணிவு திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திலிருந்து ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய அப்டேட்டை நாளை வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
இந்தப் படம் பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் மோதுகிறது.