செய்திகள்

ஒரு கோடி பார்வைகளைக் கடந்தது ‘பத்தல பத்தல’ பாடல்

DIN

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் முதல் பாடலான  ‘பத்தல பத்தல’ பாடல்  வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே  ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்  நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜுன் 3 அன்று திரையரங்கில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் மற்றும்  அனைத்து பாடல்களும்  வருகிற மே 15 அன்று வெளியாகவுள்ளன.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே யூடியூபில் ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: 15 குழுக்கள் அமைத்து விசாரணை

திருக்கழுக்குன்றம் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்கள் ரத்து?

SCROLL FOR NEXT