செய்திகள்

நயன்தாராவின் ஓ2 திரைப்பட முதல் பாடல் வெளியீடு அறிவிப்பு

DIN

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஓ2 திரைப்படத்தின் முதல்பாடல் நாளை காலை வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குனர் ஜி.எஸ். விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, குழந்தை நட்சத்திரம் ரித்விக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடைத்திருக்கும் படம் ஓ 2. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே மாயா, ஐரா ஆகிய திரில்லர் படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது மீண்டும் திரில்லர் பாணி கதையில் நடித்துள்ளார். 

இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரீர் பிக்சர்ஸ்' மூலம் தயாரித்துள்ளனர். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார். 

இந்நிலையில் ஏற்கெனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இத்திரைப்படம் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி செயலியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியா நான்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT