செய்திகள்

’ரஜினி, விஜய் வரிசையில் சிவகார்த்திகேயன்...': பிரபல விநியோகிஸ்தர் பாராட்டு

DIN

நடிகர்கள் ரஜினி, விஜய் வரிசையில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்தான் என பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது. 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற உக்ரைன் நாட்டைச்  சேர்ந்த நடிகை நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில், கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தயாரிப்பாளருமான அன்புச்செழியன் ‘ரஜினி, விஜய் வரிசையில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்தான். அவருடைய படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் எங்கள் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்தப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்’ என சிவகார்த்திகேயனை பாராட்டி பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT