செய்திகள்

சூப்பர் ஸ்டார் தந்த பரிசு.. தமன்னா நெகிழ்ச்சி!

DIN

நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த பரிசு குறித்து தமன்னா நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் நடிகை தமன்னா, ’ரஜினி அவர்களுடன் நடித்தது என் கனவு நிஜமான தருணம். ஜெயிலர் படப்பிடிப்பின்போது எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அவர் கையொப்பமிட்ட ஆன்மீக புத்தகத்தைப் பரிசளித்தார். ஒரு அர்த்தமுள்ள பரிசு அது.’ எனத் தெரிவித்துள்ளார். 

ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சிலையே படம் பிடித்தால்.. எமி ஜாக்சன்

700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு அறநிலைத்துறையின் தக்கார் நியமனம் செல்லும்!

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை!

எம்எல்சி டி20 தொடரில் அசத்தும் ஸ்டீவ் ஸ்மித்!

SCROLL FOR NEXT