செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நுழையும் பெப்சி உமா!

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பெப்சி உமா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை பெப்சி உமா  15 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு சினிமா நடிகைகளுக்கு இணையாக ஏராளான ரசிகர் கூட்டம் உள்ளது. இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும் சினிமாவுக்குள் செல்லாமல் இருந்துவிட்டார்.

90களில் தொகுப்பாளர் என்றால் பெப்சி உமா தான். அதற்கு காரணம் அவருடைய கனிவான பேச்சு, சிரித்த முகம், தமிழ் பேசும் விதம் ஆகியவையாகும்.  இந்நிலையில் பல ஆண்டுகளாக எங்கே போனார் என தெரியாமல் இருந்தார்.

சமீபத்தில், விருது வழங்கும் விழாவில் பெப்சி உமா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் மீண்டும் சின்னத்திரைக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, நீங்கள் சின்னத்திரையில் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், பெப்சி உமா பாண்டியர் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பாண்டியர் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் - ஐஸ்வர்யா தொடங்கி இருக்கும் யூடியூப் சேனலில் சிறப்பு விருந்தினராக பெப்சி உமா பங்கேற்பது போல கதை அமையும் என கூறப்படுகிறது.

பட வாய்ப்புகள் கிடைத்தும் அதை தவிர்த்த பெப்சி உமா, சின்னத்திரையில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. எனினும் இனிவரும் வாரங்களில் அதற்கான விடை கிடைத்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT