செய்திகள்

விஜய்68: நாளை முதல் படப்பிடிப்பு

விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.  

DIN

விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. 
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், ஜெய், மாதவன் உள்ளிட்டோரும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு பட நடிகை மீனாட்சி சௌத்ரி இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 
படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் படத்தின் பூஜை இன்று எளிய முறையில் நடந்து முடிந்துள்ளது. விஜயதசமி அன்று பூஜை புகைப்படங்கள் மற்றும் விடியோவுடன் கூடிய அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளது. 
அதிநவீன தொழில்நுட்பமான ஏஐ மூலம் விஜய் இளமையாக தோன்றும் பாடல்காட்சி படமாக்கப்படுகிறது. இதனிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் பங்கு என்ன? ஆம் ஆத்மி

பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு?

கேஜரிவாலின் ஒளிரும் தில்லி இதுவா? ராகுல் விமர்சனம்

SCROLL FOR NEXT