செய்திகள்

ரன்பீர் கபூரின் அனிமல் பட டீசர் அப்டேட்! 

DIN


2017ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழில் துருவ் விக்ரம் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த இயக்குநரின் புதிய படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கொடூரமான விலங்கு போல ரன்பீர் ரத்தம் வடிய கையில் சுத்தியலுடன் சிகரெட் பிடிக்கும் முதல் பார்வை போஸ்டர் ஜனவரியில் வெளியாகியது.   

இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநரின் சொந்த தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் வெளியாக இருந்த நிலையில் டிச.1ஆம் தேதி வெளியாகுமென இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் படத்தின் டீசர் செப்.28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம், ஹரியாணா, உத்தரகண்டில் வசிப்போருக்கு சிஏஏ-இன் கீழ் குடியுரிமை: மத்திய அரசு தொடக்கம்

காலாவதியான பிஸ்கெட் விற்பனை: ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை

சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் இன்று சிறப்புப் பிரிவினருக்கான சோ்க்கை கலந்தாய்வு

சுரண்டை பதியில் ஜூன் 2இல் வைகாசி தா்மபெருந்திருவிழா

புதிய குற்றவியல் சட்டங்கள்: செவிலியா் மாணவிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT