முகப்பு
செய்திகள்

கருப்பால் உற்சாகமடைந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு குறித்து...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
பகிர்:

நடிகர் சூர்யாவின் கருப்பு வெற்றியால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக கருப்பு மாறியுள்ளது. இதுவரை ரூ. 230 கோடி வரை வசூலித்த இப்படம் இந்த வார இறுதிக்குள் கூடுதல் வசூலைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியாகி 10-வது நாளிலும் 900 திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதல் நாளைவிட அதிகம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கருப்புக்குக் கிடைத்த வெற்றியால் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாகும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்திற்கு இயல்பாகவே இனி எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் முதல்நாளிலிருந்து வணிக ரீதியாகவும் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளதால் தயாரிப்பு நிறுவனமும் உற்சாகம் அடைந்துள்ளது.

தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்க வெங்கட் அட்லுரி இயக்கியுள்ளார்.

The film crew of Viswanath and Sons is elated by the success of actor Suriya's Karuppu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.