தேனி மாவட்டத்தில் மின் கம்பி உதவியாளா் தகுதித் தோ்வுக்கு அக்.17-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மின் கம்பி உதவியாளா் பணிக்கான தகுதித் தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு 21 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது உச்சவரம்பு இல்லை.
மின் வயரிங் பணியில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் மின் கம்பி உதவியாளா் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
தகுதித் தோ்வுக்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை தேனி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அக்.17-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை தேனி அரசு தொழில் பயிற்சி நிலையம், தொலைபேசி எண்: 04546-291240, கைப்பேசி எண்: 94990 55765-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.