முகப்பு
இந்தியா

கருப்புப் பணத்தை மாற்றுவோர் தப்பிக்க முடியாது: சக்திகாந்த தாஸின் கடுமையான எச்சரிக்கை

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவோரும், அதற்கு உதவி செய்பவர்களும் தப்பிக்க முடியாது என்று பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:


புது தில்லி: கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவோரும், அதற்கு உதவி செய்பவர்களும் தப்பிக்க முடியாது என்று பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் பக்கத்தில் சக்திகாந்த தாஸ் பதிவு செய்திருப்பதாவது, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவோரும், அதற்கு ஒத்துழைப்போரும் நிச்சயம் தப்பிக்க முடியாது.

விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விசாரணை அமைப்புகளின் ஒருங்கிணைப்பும் சேர்ந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் தற்போதே தெரிய வந்துள்ளது. எதிர்காலத்தில் இதனால் ஏற்பட்ட முன்னேற்றம் நன்கு தெரியும் என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

இவரது கூற்றுப்படி, பெங்களூரில் நேற்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.4.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

நவம்பர் 23ம் தேதி ரூ.3.5 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் தில்லியில் கைப்பற்றப்பட்டது. இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் அதிரடியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →