திருவனந்தபுரத்திலுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதைப் பார்வையிடும் கட்சியின் மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன் உள்ளிட்ட தலைவர்கள். 
இந்தியா

கேரளம்: பாஜக அலுவலகத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து பந்த்

திருவனந்தபுரத்திலுள்ள பாஜக அலுவலகத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து, அக்கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

DIN

திருவனந்தபுரத்திலுள்ள பாஜக அலுவலகத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து, அக்கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக-வின் மாவட்ட தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், மேற்படி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டுச் சென்றனர்.
சம்பவம் நடைபெற்றபோது அந்த அலுவலகத்தினுள் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை.
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்டுதல் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக பாஜக குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இந்த தாக்குதலைக் கண்டித்து பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையொட்டி, அந்நகரிலுள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. மேலும், வாகனப் போக்குவரத்தும் முடங்கியது.
இந்த முழு அடைப்பின்போது, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT