இந்தியா

டெங்கு, சிக்குன்குன்யாவை தடுக்க மாநகராட்சிகளுக்கு ரூ.25 கோடி நிதி: தில்லி அரசு தகவல்

தில்லியில் சிக்குன்குன்யா, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 3 மாநகராட்சிகளுக்கும் ரூ.25 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு புதன்கிழமை தெரிவித்தது.

தினமணி

தில்லியில் சிக்குன்குன்யா, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 3 மாநகராட்சிகளுக்கும் ரூ.25 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், "டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, வடக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.11.50 கோடியும், தெற்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.8.38 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.4.65 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது' என்றன.

நடவடிக்கைகள் தீவிரம்: தில்லியை பொருத்தவரை, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில்தான் டெங்கு, சிக்குன்குன்யா உள்ளிட்ட கொசுக்களால் பரவக் கூடிய நோய்கள் ஏற்படத் தொடங்கும். அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் இந்நோய்களின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால், நிகழாண்டிலோ நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது.

நிகழாண்டை பொருத்தவரை ஜனவரியிலேயே டெங்கு, சிக்குன்குன்யா ஆகிய நோய்கள் பரவத் தொடங்கிவிட்டன. ஜனவரி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், நகரில் 61 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 131 பேருக்கு சிக்குன்குன்யாவும் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் சார்பில் தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 28-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்தில் 35 பேருக்கு சிக்குன்குன்யாவும், 21 பேருக்கு டெங்குவும் ஏற்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த மாதம் ஆங்காங்கே லேசான மழைப் பொழிவு நிலவியது. இதன் காரணமாக கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து, டெங்கு, சிக்குன்குன்யா உள்ளிட்ட நோய்களின் பாதிப்பும் திடீரென அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தில்லியில் கடந்த ஆண்டு சிக்குன்குன்யாவால் 7,760 பேரும், டெங்குவால் 4,431 பேரும் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய ஆண்டில் சுமார் 16,000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது.

நிகழாண்டில் மேற்கண்ட நோய்களின் தாக்கத்தை தடுக்க தில்லி அரசும், மாநகராட்சிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT