மத்தியப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் மன்த்சௌர் என்ற இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் துணைத் தலைவர் இன்று மத்திய பிரதேசம் சென்றார். ஆனால் அவரை நீமூச் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதை ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் தடுத்து நிறுத்துகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.