இந்தியா

விமானிகள் மீதான புகார்: திரும்பப் பெற்றது டிஜிசிஏ

ஆபாசத் தகவல்களைப் பரப்பியது தொடர்பாக விமானிகள் மீது தாம் அளித்த புகாரை உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) திரும்பப் பெற்றுள்ளது.

DIN

ஆபாசத் தகவல்களைப் பரப்பியது தொடர்பாக விமானிகள் மீது தாம் அளித்த புகாரை உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) திரும்பப் பெற்றுள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக டிஜிசிஏ விளங்குகிறது. இந்நிலையில், டிஜிசிஏ அதிகாரிகள் சிலர் குறித்து ஆபாசமான தகவல்களை "ஸ்பைஸ் ஜெட்', "ஜெட் ஏர்வேஸ்', "இண்டிகோ', "கோ-ஏர்' ஆகிய விமான நிறுவனங்களில் பணிபுரியும் பைலட்டுகள் தங்களின் வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து தில்லி காவல்துறையிடம் டிஜிசிஏ கடந்த சில நாள்களுக்கு முன்பு புகார் அளித்தது. இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான விமானிகள் அனைவரும் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் மீதான புகாரை டிஜிசிஏ வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT