இந்தியா

கர்நாடக மேலவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

கர்நாடக சட்ட மேலவைத் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்திக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

DIN

கர்நாடக சட்ட மேலவைத் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்திக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
75 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்ட மேலவையில் காங்கிரஸ் கட்சிக்கு 33, பாஜகவுக்கு (மேலவைத் தலைவர் உள்பட) 23, மஜதவுக்கு 13, சுயேச்சைகளுக்கு 5 இடங்கள் உள்ளன. ஓர் இடம் காலியாக உள்ளது.
பாஜக மற்றும் மஜத ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மேலவைத் தலைவர் பதவியை பாஜகவின் டி.எச்.சங்கரமூர்த்தியும், மேலவை துணைத் தலைவர் பதவியை மஜதவின் மரிதிப்பே கெளடாவும் வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மஜதவின் துணையுடன் மேலவைத் தலைவர் பதவியை பாஜகவிடம் இருந்து பறித்துவிட திட்டமிட்ட காங்கிரஸ், தனது உறுப்பினர் வி.எஸ்.உக்ரப்பா மூலம் மேலவைத் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்திக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.
அதன்படி, கர்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை அதன் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்திக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு எதிராக 37 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானத்துக்கு எதிராக ஒரு வாக்கு கூடுதலாக பதிவானதால், தீர்மானத்தை தள்ளுபடி செய்வதாக துணைத் தலைவர் மரிதிப்பே கெளடா அறிவித்தார். இதனால், மேலவைத் தலைவராக டி.எச்.சங்கரமூர்த்தியே தொடரும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT