இந்தியா

சட்டவிரோத சுரங்க வழக்கு: குமாரசாமியை ஜூன் 20 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

சட்டவிரோத சுரங்கம் தொடர்பான வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமியை வரும் 20-ஆம் தேதி வரை கைது செய்ய

DIN

சட்டவிரோத சுரங்கம் தொடர்பான வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமியை வரும் 20-ஆம் தேதி வரை கைது செய்ய அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.
கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் குறித்து லோக் ஆயுக்த அமைப்பின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், கர்நாடக முதல்வராக ஹெச்.டி.குமாரசாமி பதவி வகித்தபோது, அப்போதைய சுரங்கத் துறை ஆணையர் கங்காராம் பதேரியாவுக்கு, ஜந்தகல் சுரங்க நிறுவனத்துக்கு சாதகமான கோப்புக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி கடந்த 2007-ஆம் ஆண்டில் நெருக்கடி கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கர்நாடக வருவாய்த் துறை செயலராக இருந்த பதேரியாவை லோக் ஆயுக்தா சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த மாதம் கைது செய்தது. மேலும், குமாரசாமிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில், பதேரியா போன்று தாமும் கைது செய்யப்படலாம் என்று கருதி, பெங்களூரு லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி குமாரசாமி மனு தாக்கல் செய்தார். அந்த மனு, லோக் ஆயுக்த நீதிமன்ற நீதிபதி கோபால் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குமாரசாமி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் தமக்கு முன்ஜாமீன் அளிக்குமாறு கோரி குமாரசாமி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ரத்னகலா, குமாரசாமியை வரும் 20-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று எஸ்ஐடி-க்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை 20-ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT