இந்தியா

லாட்டரி மீதான ஜிஎஸ்டி வரி குறித்து நாளை மறுதினம் முடிவு

சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் சார்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் லாட்டரி மீது விதிக்கப்பட உள்ள வரி குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

DIN

சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் சார்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் லாட்டரி மீது விதிக்கப்பட உள்ள வரி குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதற்காக ஜூலை முதல் தேதியிலிருந்து சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், பல்வேறு பொருள்கள் மற்றும் சேவை மீதான வரி குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூடி முடிவெடுத்து வருகிறது.
இதுவரை அந்த கவுன்சில் சார்பில் 16 முறை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களின்போது பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு தரம்வாரியாக 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சில பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரி அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டது. கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது ஊதுபத்தி, இன்சுலின் உள்ளிட்ட 66 பொருள்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 17-ஆவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) நடைபெற உள்ளது. இதில் லாட்டரி, மின்னணு முறையில் செலுத்தப்படும் பண ரசீதுகள் மீது விதிக்கப்பட உள்ள வரி குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
கர்நாடக பேரவையில் நிறைவேற்றம்: கர்நாடக சட்டப் பேரவையில் சரக்கு - சேவை வரி மசோதா வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இத்துடன் சேர்த்து நாட்டில் 25 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசம் ஒன்றிலும் சரக்கு - சேவை வரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT