ஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து மரத்தின் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று ஹிமாச்சல் பிரதேசம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து கங்கரா என்ற இடத்தில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் வீரபத்ரசிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.