இந்தியா

தபால் மூலம் தலாக்: நிராகரித்தது கேரள நீதிமன்றம்

பதிவுத் தபால் மூலம் தலாக் கூறியதை சட்டப்பூர்வமானதாக ஆக்கக் கோரிய நபரின் மனுவை மலப்புரம் மாவட்ட குடும்ப நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

DIN

பதிவுத் தபால் மூலம் தலாக் கூறியதை சட்டப்பூர்வமானதாக ஆக்கக் கோரிய நபரின் மனுவை மலப்புரம் மாவட்ட குடும்ப நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
மலப்புரத்தைச் சேர்ந்த அலி ஃபைஸி என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு, அவரது மனைவிக்கு பதிவுத் தபால் மூலம் தலாக் கூறி கடிதம் அனுப்பினார்.
அதை சட்டப்பூர்வமானதாக்கி இருவருக்கும் விவாகரத்து அளிக்குமாறு மலப்புரம் குடும்ப நீதிமன்றத்தில் அலி ஃபைஸி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகிய அவரது மனைவி, விவகாரத்து செய்வதற்கான காரணத்தை தனக்கு தெரிவிக்கவில்லை என்று வாதிட்டார்.
'விவாகரத்து செய்வதற்கான சரியான காரணத்தையும் கூறவில்லை; இஸ்லாமிய மதச் சட்டத்தையும் முறையாகப் பின்பற்றவில்லை' என்று கூறி அலியின் மனுவை நீதிபதி ரமேஷ் பாய் நிராகரித்தார்.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை கணவர் விவாகரத்து செய்யும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆதரித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT