இந்தியா

பசுக்களின் எண்ணிக்கை குறைவதை தடுக்க தேசியக் கொள்கை தேவை: மத்திய அரசுக்கு என்ஜிடி உத்தரவு

பசுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வதைத் தடுக்க தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட் டுள்ளது.

DIN

பசுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வதைத் தடுக்க தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட் டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் அஸ்வினி குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவு விவரம்: பல்வேறு மாநிலங்கள் சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி பசுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது ஊர்ஜிதமாகிறது. பசு இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும், கால்நடை பராமரிப்புத் துறையும் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
மிகத் தீவிரமான பிரச்னை என்பதால் பசு இனத்தை அழியாமல் தடுத்து நிறுத்துவதற்கு தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்துவிட்டு பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு அந்த அமர்வு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT