இந்தியா

பாஜக எம்.பி. சித்தேஸ்வர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா தொகுதி பாஜக மக்களவை உறுப்பினருமான ஜி.எம்.சித்தேஸ்வர் இல்லம், அலுவலகத்தில் வியாழக்கிழமை வருமான வரித் துறையினர்

DIN

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா தொகுதி பாஜக மக்களவை உறுப்பினருமான ஜி.எம்.சித்தேஸ்வர் இல்லம், அலுவலகத்தில் வியாழக்கிழமை வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சித்ரதுர்கா மாவட்டம், பீமாசமுத்திரத்தில் உள்ள சித்தேஸ்வரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் பங்குதாரராக உள்ள ஹுப்பள்ளி செளஹாரதா கூட்டுறவு வங்கியில் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித் துறையினர், பெரும் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளின் ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், முதல் முறையாக பாஜக மக்களவை உறுப்பினர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT