இந்தியா

துப்பாக்கி முனையில் கொள்ளை; ஒருவர் சுட்டுக் கொலை

யமுனை விரைவுச் சாலையில் காரில் சென்றவர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பல், ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.

DIN

யமுனை விரைவுச் சாலையில் காரில் சென்றவர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பல், ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.
காரில் இருந்த பெண்களையும் இந்தக் கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கௌதம் புத்த நகர் காவல் துறை எஸ்எஸ்பி லவ் குமார் வியாழக்கிழமை கூறுகையில், "யமுனை விரைவுச் சாலையின் வழியாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாருக்கு 8 பேர் குடும்பத்துடன் காரில் சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் உறவினரைச் சந்திக்க அவர்கள் சென்றுள்ளனர். ஜீவார் அருகே உள்ள சபோட்டா கிராமத்தில் வரும்போது வியாழக்கிழமை நள்ளிரவு 1.40 மணியளவில் அவர்களது காரின் சக்கரம் பழுதடைந்து உள்ளது.
பழுதான சக்கரத்தை ஓட்டுநர் மாற்றிக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று துப்பாக்கியுடன் நுழைந்து காரில் இருந்தவர்களைத் தாக்கி உள்ளது. அவர்கள் துப்பாக்கி முனையில் பெண்கள் அணிந்திருந்த நகைகளையும், ரூ. 44 ஆயிரத்தையும் கொள்ளையடித்துவிட்டு, காரில் இருந்த பெண்களையும் அந்தக் கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.
இதைத் தடுக்க முயன்ற ஒருவரை அந்தக் கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நொய்டாவில் இருந்து ஷாஜஹான்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்த தாயையும், 13 வயது மகளையும் ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து மீண்டும் இதேபோன்ற சம்பவம் சபோட்டா கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT