இந்தியா

பசுக் காவலர்களுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை: நிதின் கட்கரி

பசுக் காவலர்கள் என்று கூறப்படுபவர்களுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; அவர்களை பாஜக பாதுகாக்கவும் இல்லை என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

DIN

பசுக் காவலர்கள் என்று கூறப்படுபவர்களுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; அவர்களை பாஜக பாதுகாக்கவும் இல்லை என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக் காவலர்கள் என்ற அமைப்பினர் பசுக்களை ஏற்றிச் சென்று வாகனத்தில் வழி மறித்து அதில் வந்தவர்களை அடித்து உதைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறி சில அமைப்பினர் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு பாஜக ஆதரவு அளித்து வரு
கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த நிதின் கட்கரி கூறியதாவது:
"அனைவருடன், அனைவருக்குமான வளர்ச்சி' என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மதரீதியாக சிறுபான்மையினராக இருப்பவர்களிடமும், ஜாதி, மொழிரீதியாகவும் மத்திய அரசு யாரிடமும் எவ்வித பாரபட்சமும் காட்டுவதில்லை.
காவி உடை அணிந்து யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அவர்களை பாஜகவுடன் தொடர்புபடுத்துகிறார்கள். உண்மையில் அவர்களுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பசுவதை கூடாது என்பதை பாஜக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வன்முறைகள் நடைபெறக் கூடாது. இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களும் அல்ல. யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அது தவறுதான். அவர்களை பாஜக ஆதரிக்காது.
இதுபோன்ற வன்முறைகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கண்டித்துள்ளார். பசுக் காவலர்கள் என்று கூறி வன்முறையில் ஈடுபடுபவர்களை பாஜகவுடன் தொடர்புபடுத்துவது இடதுசாரிகளின் பிரசார முறைகளில் ஒன்றுதான்.
இந்த வன்முறையாளர்கள் சிலர் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மறித்து பணம் பறிப்பதாகவும் தெரிகிறது. பாஜக, விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இல்லை. தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசத்தில் வறுமையை ஒழிப்பது, நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவது, நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றில்தான் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது என்றார் நிதின் கட்கரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT