தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி. 
இந்தியா

பிரதமரிடம் அரசியல்ரீதியாக பேசவில்லை: மம்தா

மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான விஷயங்களை விவாதிப்பதற்காகவே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியதாகவும், அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை என்றும் அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ்

DIN

மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான விஷயங்களை விவாதிப்பதற்காகவே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியதாகவும், அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை என்றும் அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அரசியல் அரங்கில் எதிரெதிர் துருவங்களாக விளங்கி வரும் அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற இந்தச் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை முன்னிறுத்த மம்தா உள்ளிட்டோர் திட்டமிட்டு வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் உள்பட பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் மம்தா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், மோடியைச் சந்திக்க அவர் நேரம் கேட்டிருந்தார். அதன்படி வியாழக்கிழமை அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வந்த மம்தா, அவரைச் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மேற்கு வங்கத்தின் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாகப் பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்பட்டது. மற்றபடி, அரசியல்ரீதியாக எந்த விஷயங்களும் பேசவில்லை.
மேற்கு வங்க மாம்பழங்களுக்கு வங்கதேச அரசு அதிக வரி விதித்துள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும், ஆத்ரேய் நதி மீது அந்நாடு புதிய அணை கட்டி வரும் விவகாரத்தில் உரிய தீர்வு காணுமாறும் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதுமட்டுமன்றி, மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு வழங்கும் கடனுதவியை மறுவரையறை செய்யுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது என்றார் மம்தா பானர்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT