இந்தியா

ஏடிஎம் பணம் ரூ.50 லட்சம் கையாடல்: தனியார் நிறுவன ஊழியர் கைது

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப வேண்டிய ரூ.50 லட்சம் ரொக்கத்தை கையாடல் செய்ததாக தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப வேண்டிய ரூ.50 லட்சம் ரொக்கத்தை கையாடல் செய்ததாக தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து இத்தகைய முறைகேட்டில் அவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்கான பணிகளை தனியார் சேவை நிறுவனங்கள் மூலம் பெரும்பாலான வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறு தாணேவில் செயல்படும் ஒரு சேவை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ரோஷன் பாட்டீல் (29) என்பவர், வங்கி ஏஎடிஎம் இயந்திரங்களில் நிரப்ப வேண்டிய பணத்தை கையாடல் செய்ததாகத் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனமானது வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்தபோது இந்த முறைகேடு தெரிய வந்துள்ளது. அதன்படி, கடந்த 6 மாதங்களாக ரூ.49.9 லட்சம் ரொக்கத்தை ரோஷன் போலிக் கணக்குகளைக் காட்டி திருடியது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் காவல் நிலையத்தில் புகாரளித்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் ரோஷனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கஞ்சா விற்பனை: வட மாநில இளைஞா் கைது

SCROLL FOR NEXT