முகப்பு
இந்தியா

பொது செயல் திட்டம்: எதிர்க்கட்சிகள் நாளை ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் பொது செயல் திட்டத்தை வகுத்து கூட்டணியாக போட்டியிடுவது குறித்து, தில்லியில் எதிர்க்கட்சிகள் வரும் 27ஆம் தேதி கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளன.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:25 am IST
பகிர்:

மக்களவைத் தேர்தலில் பொது செயல் திட்டத்தை வகுத்து கூட்டணியாக போட்டியிடுவது குறித்து, தில்லியில் எதிர்க்கட்சிகள் வரும் 27ஆம் தேதி கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளன.
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாக நூலகத்தில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது தொடர்பான திட்டம் குறித்தும், புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.