இந்தியா

பிறந்தவுடன் இறந்ததாக கூறப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் சாதனை! ஓர் நெகிழ்ச்சி சம்பவம்..

Muthumari

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மருத்துவமனையில் 29 ஆண்டுகளுககு முன்னதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை எந்த அசைவும் இன்றி இருக்கவே, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்துவிட்டனர்.  

குப்பையில் போடப்பட்ட குழந்தை, சிறிது நேரத்தில் அசைவு கொடுக்க, அதைப்பார்த்த ஒருவர் குழந்தையை எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது 29 ஆண்டுகளுக்கு பின்னர், அந்த குழந்தை வளர்ந்து சாதனை படைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிகாப்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் நூபுர் சிங், பிறந்தவுடன் இறந்ததாக கூறப்பட்டவர். அவர் பிறந்து சிறிது நேரம் எந்த சிகிச்சையும் அளிக்காததால், மாற்றுத்திறனாளியாக வளர்ந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்ததுடன், பி.எட் படிப்பிலும் தேர்ச்சி பெற்று தற்போது பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். 

ஹிந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் பிரபல அறிவுசார் நிகழ்ச்சியான 'Kaun Banega Crorepati' என்ற நிகழ்ச்சியில், நூபுர் சமீபத்தில் கலந்துகொண்டு 12 பொதுஅறிவு கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து, ரூ. 12.5 லட்சம் பரிசினை பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்வில் நூபுரின் தாயாரையும் அமிதாப் பச்சன் மற்றும் அரங்கத்தில் உள்ளோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

நூபுர் குறித்து அவரது தாயார் கூறும்போது, "நூபுர் சிறு வயது முதலே அறிவுத்திறன் மிக்கவராக இருந்தார். பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளிலும் பங்குகொண்டு வெற்றி பெற்றுள்ளார். கே.பி.சி நிகழ்ச்சியையும் அவர் தொடர்ந்து பார்த்து வருகிறார். அமிதாப் கேட்கும் கேள்விகளுக்கு, போட்டியாளர் பதில் சொல்வதற்கு முன்னரே, நூபுர் சரியாக பதில் கூறி விடுவார்.

எனவே இந்த போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்பித்தோம். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளார். அவரது சாதனை மற்ற பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

தற்போது நூபுரின் இந்த வெற்றிக்கு சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரின் தைரியத்தை பார்த்து மிரண்டு போனதாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT