இந்தியா

சாரதா நிதி நிறுவன மோசடி: திரிணமூல் எம்.பி.க்கு மீண்டும் அழைப்பாணை

DIN


சாரதா நிதிநிறுவன மோசடி விவகாரம் தொடர்பான வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சதாப்தி ராய்க்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
சாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பான வழக்கில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்துவதற்கு சதாப்தி ராய், திரிணமூல் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட குணால் கோஷ், தொழிலதிபர்கள் சஜ்ஜன் அகர்வால், சந்திர் அகர்வால், கால்பந்து கழக நிர்வாகி தேவவிரத சர்க்கார், சாரதா நிதிநிறுவன மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுதிப்தா சென்னுக்கு மிகவும் நெருக்கமானவரான அரிந்தம் தாஸ் ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்த மாதத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, சதாப்தி ராய்க்கு அமலாக்கத் துறை கடந்த வாரம் சம்மன் அனுப்பியது. ஆனால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதை சுட்டிக்காட்டி, தம்மால் விசாரணையில் நேரில் ஆஜராக இயலாது என அவர் தெரிவித்து விட்டார் என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
சாரதா நிதிநிறுவன மோசடி விவகாரத்தில் குணால் கோஷை சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்தது. பின்னர் 2016ஆம் ஆண்டில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தேவவிரத சர்க்காரை சிபிஐ 2014ஆம் ஆண்டு கைது செய்தது. அவரும் 2015ஆம் ஆண்டில் ஜாமீனில் 
வந்தார். தாஸ், சந்திர் ஆகியோரையும் சிபிஐ கைது செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT