இந்தியா

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரி மனு

DIN


வாக்களிப்பதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞரும், பாஜக மூத்த தலைவருமான அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்த இந்த பொதுநல மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்காளர் அடையாள அட்டை எண்ணை ஆதாருடன் இணைப்பதால் அரசமைப்புச் சட்டத்தின் எந்தவித உரிமைகளும் மீறப்படுவதாக அர்த்தம் கிடையாது. ஆதாருடன் இணைத்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
ஆதார் அடிப்படையில் வாக்களிக்கும்போது, வாக்காளரின் விரல் ரேகையை வைத்து அவர் ஏற்கெனவே வாக்களித்து விட்டாரா இல்லையா என்பதை கண்டறிய முடியும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மனுவில், மக்களின் அசையும், அசையா சொத்து விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணம், பினாமி, ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும். சொத்து விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைத்தால், ஆண்டுதோறும் நாட்டின் வளர்ச்சி 2 சதவீதம் அதிகரிக்கும்.  தேர்தலிலும் கருப்புப் பண பயன்பாடு இல்லாமல் போகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT