இந்தியா

விமானப்படை விமானங்களை மேம்படுத்தும் பணி: ராஜ்நாத் சிங் விளக்கம்

DIN


விமானப்படை விமானங்களை மேம்படுத்தும் (அப்கிரேடு) பணி குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.
அஸ்ஸாமில் இருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு அண்மையில் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 13 பேரும் பலியாகினர்.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை பதிலளித்தார். அவர் கூறியதாவது:
இந்திய விமானப்படையில் ஏஎன் -32 ரக விமானம், 115 எண்ணிக்கையில் உள்ளன. இதில் 55 விமானங்கள் மேம்படுத்தப்பட்டு விட்டன.
தகுதியான விமானங்களுக்கு மட்டுமே பறக்க அனுமதி தரப்படுகிறது. விமானங்களை மேம்படுத்தும் பணி சீராக நடைபெறுகிறது. அந்தப் பணி தொடரும்.
ஏஎன்-32 ரக விமானத்தை மேம்படுத்தாத பட்சத்தில், அதனால் பறக்க முடியாது என்று பொருள் கிடையாது.
ஒவ்வொரு விமான விபத்துக்குப் பிறகும், அது குறித்து ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 34 விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் 27 அறிக்கைகள் தயாராகி விட்டன. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு சுட்டிக்காட்டப்படும் தவறுகள், கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, எதிர்காலத்தில் விபத்துகள் நேரிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமல்படுத்தப்படுகிறது.
விமான விபத்துகள் நேரிடாமல் இருக்கும் வகையில்தான் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.  இருப்பினும், மனித தவறு , மேக மூட்டம் போன்றவற்றால் விமானங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

SCROLL FOR NEXT