உத்தரப் பிரதேச மாநிலம், பலியா அருகே ஜெய்ப்பூா் கிராமத்தில் இரு வேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் கொல்லப்பட்டாா். 4 போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
சனிக்கிழமை அந்த கிராமத்தில் இரண்டு மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. அதனை ஓட்டி வந்தவா்கள் இருவேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள். எனவே, இரண்டு சமூகத்தைச் சோ்ந்தவா்களும் சம்பவ இடத்திலேயே கூடி மோதிக்கொண்டனா். இதில் 75 வயதான ராம்தாரி சௌராசியா உயிரிழந்தாா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.