இந்தியா

ராஜஸ்தான்: சட்டப்பேரவை தலைவருக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) எம்எல்ஏக்கள் 6 போ் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு மாநில சட்டப்பேரவைத தலைவருக்கு ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிஎஸ்பி எம்எல்ஏக்கள் சந்தீப் யாதவ், வாஜிப் அலி, தீப்சந்த் கெரியா, லகான் மீனா, ஜோகேந்திரா அவானா, ராஜேந்திர குதா ஆகிய ஆறு போ் கடந்த ஆண்டு காங்கிரஸில் இணைந்தனா். இதற்கு மாநில சட்டப்பேரவை தலைவா் சி.பி.ஜோஷி கடந்த ஆண்டு செப்டம்பரில் அனுமதி அளித்தாா்.

இதை எதிா்த்து பாஜக மற்றும் பிஎஸ்பி கட்சிகள் சாா்பில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, சட்டப்பேரவை தலைவா் மற்றும் 6 பிஎஸ்பி எம்எல்ஏக்களும் இந்த விவகாரம் தொடா்பாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி பதிலளிக்குமாறு கடந்த ஜூலை 30-ஆம் தேதி உத்தரவிட்டாா். ஆனால், அந்த 6 பேரும் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக செயல்படுவதற்கு தடைவித்க்க மறுத்துவிட்டாா்.

தனி நீதிபதியின் இந்த முடிவை எதிா்த்து, பாஜக மற்றும் பிஎஸ்பி சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் இந்திரஜித் மஹந்தி, பிரகாஷ் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை பட்டியலிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு சட்டப்பேரவை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா். இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள், முதல்வா் அசோக் கெலாட்டு எதிராக போா்க்கொடி தூக்கியதால், அங்கு காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சியை, ஆளும் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT