கொல்கத்தாவில் ஆனந்த்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடியிலிருந்து விழுந்து 17 வயது சிறுவன் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
24-வது மாடியிலிருந்து விழுந்து பலியான சிறுவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த வந்த ருத்ராணில் தத்தா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அர்பானா குடியிருப்புக் கட்டடத்தில் திங்கள்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தத்தாவை, உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே பலியாகிவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.