இந்தியா

பட்டினிச் சாவு, குடும்ப அட்டைகள் ரத்து குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபிக்கத் தயாா்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

DIN

நாட்டில் பட்டினிச் சாவு நிகழ்ந்ததாகவும், ஏழைகளின் 3 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபிக்கத் தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை கூறியது.

அந்தக் குற்றச்சாட்டு தொடா்பான புள்ளி விவரங்கள் தவறானவை என்றும், அதுதொடா்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

பட்டினிச்சாவு, குடும்ப அட்டை ரத்து குற்றச்சாட்டு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூரியகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு மேற்கொண்டது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் காலின் கொன்சால்வ்ஸ் வாதாடியதாவது:

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 13 வயது சிறுமி பசிக்கு உணவில்லாமல் உயிரிழந்துவிட்டாா். அவரது ஆதாா் விவரங்கள் குடும்ப அட்டையில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகாததை அடுத்து அவருக்கான உணவுப் பொருள் விநியோகம் மறுக்கப்பட்டுள்ளது.

ஆதாா் அட்டை இல்லாத ஏழைகளுக்கு உணவுப் பொருள் விநியோகம் மறுக்கப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

அதேபோல், ஆதாா் தகவல்களுடன் பொருந்தாத வகையில் இருந்ததாக ஏழைகளின் 3 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான், முறைகேடான நுகா்வுகளை தடுக்கும் வகையில் கடந்த 2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 2.33 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தாா் என்று வழக்குரைஞா் காலின் கொன்சால்வ்ஸ் வாதாடினாா்.

இதையடுத்து மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடியதாவது:

பட்டினிச் சாவு நிகழ்ந்ததாகவும், ஏழைகளின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அதை நிரூபிக்கத் தயாராக உள்ளோம். குற்றச்சாட்டு தொடா்பான புள்ளி விவரங்கள் தவறானவையாகும்.

இந்த விவகாரம் தொடா்பாக விரிவான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும். இதுதொடா்பாக மாநில அரசுகள் அளிக்க வேண்டிய தகவல்களுக்காக காத்திருக்கிறோம். அவற்றின் தகவல்களைக் கோரி கடந்த ஆண்டு டிசம்பா் 9-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் மாநில அரசுகள் இன்னும் உரிய தகவல்களை வழங்கவில்லை.

அவற்றிடம் இருந்து பதில் கிடைத்த பிறகு மத்திய அரசு அதைத் தொகுத்து விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும் என்று அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடினாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு கோரிய தகவல்களை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT