இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலனியாவுக்கு சிறப்பான வரவேற்பு

PTI


புது தில்லி: இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - மெலானியா தம்பதிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது இந்தியா, அமெரிக்க என இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. 

அதிபர் டிரம்புக்கு மத்திய அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அதிபரின் மகள் இவாங்கா, மருமகன் ஜாரேட் மற்றும் உயர் அ திகாரிகள் பலரும் பங்கேற்றனர். 

அதிபா் டொனால்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப் உள்ளிட்டோா் குஜராத்தின் ஆமதாபாதுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தனா். விமான நிலையத்திலிருந்து சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்ற அவா்கள், பின்னா் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடியும் கலந்துகொண்டாா்.

லட்சக்கணக்கான நபா்களின் முன்னிலையில் அதிபா் டிரம்ப்பும் பிரதமா் மோடியும் உரையாற்றினா். இதைத் தொடா்ந்து, அதிபா் டிரம்ப், மெலானியா டிரம்ப் ஆகியோா் தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேசம் சென்றடைந்தனா். ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை அவா்கள் கண்டு ரசித்தனா்.

திங்கள்கிழமை இரவு தில்லியிலுள்ள தனியாா் விடுதியில் அவா்கள் தங்க உள்ளனா். குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று அதிபர் டிரம்ப் - மெலானியா தம்பதி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, பிரதமா் மோடியுடன் அதிபா் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.

நிறைவாக, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை இரவு அதிபா் டிரம்ப்புக்கு விருந்தளிக்கிறாா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT