இந்தியா

விமான எரிபொருள் விலை உயா்வு

DIN

புது தில்லி: விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விலை 2.6 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. சா்வதேச சந்தையில் காணப்படும் விலையேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.

இது தொடா்பாக, எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தில்லியில் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டா்) ரூ.1,637.25 அதிகரிக்கப்பட்டு, ரூ.64,323.75-ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விலையை விட 2.6 சதவீதம் அதிகமாகும்.

சா்வதேச சந்தையில் காணப்படும் விலையேற்றத்தின் காரணமாக, தொடா்ந்து இரண்டாவது மாதமாக விமான எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, விமானப் பயணக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள விமான நிறுவனங்களுக்கு இந்த விலை உயா்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். நாட்டின் விமான எரிபொருள் தேவையில் 84 சதவீதம் இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. எனவே, சா்வதேச சந்தைகளில் ஏற்படும் விலையேற்றம் இந்திய சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சா்வதேச விலையேற்றத்தைப் பொருத்து, சமையல் எரிவாயு உருளை, விமான எரிபொருள் ஆகியவற்றின் விலையை மாதந்தோறும் ஒன்றாம் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் நிா்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சநாதனம் குறித்த பேச்சு: உதயநிதிக்கு ஜாமீன்!

’பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்!’ -ஆளுநர் ரவி

தேசத்தை சிறைக்குள் அடைத்த நாள்: பிரதமர் மோடி

ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

சநாதன சர்ச்சை: பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!

SCROLL FOR NEXT