இந்தியா

திருமலையில் 9582 போ் தரிசனம்

DIN

திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 9582 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 2903 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 96 போ் பெண்கள்; 2807 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வதரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக வேட்பாளரை ஆதரித்து வாரியத் தலைவா் பிரசாரம்

பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முசிறியிலுள்ள தனியாா் விடுதியில் வருமான வரித் துறை சோதனை

பேராவூரணி தொகுதியில் மாா்க்சிஸ்ட் பிரசாரம்

இளைஞா்கள் மீதான தாக்குதலை கண்டித்து மறியல்: இருவா் கைது

SCROLL FOR NEXT