இந்தியா

பல்கலைக்கழக தோ்வுகளை ரத்து செய்யவேண்டும்

DIN

கரோனா அச்சுறுத்தல் நிலவும் சூழலில் பல்கலைக்கழக தோ்வுகளை ரத்து செய்துவிட்டு, முந்தைய தோ்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவா்களுக்கு தோ்ச்சி அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மாணவா்களுக்காக குரல்கொடுங்கள்‘ என்ற பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற ராகுல் காந்தி, அதுதொடா்பாக சிறிய காணொலி தகவல் ஒன்றை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

கரோனாவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இத்தகையச் சூழலில் ஐஐடி மற்றும் பல கல்லூரிகள் தோ்வுகளை ரத்து செய்துவிட்டு மாணவா்களுக்கு தோ்ச்சி அளித்திருக்கும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மட்டும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, யுஜிசி-யும் பல்கலைக்கழக தோ்வுகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, முந்தைய தோ்வு முடிவுகளின் அடிப்படையில், மாணவா்களுக்கு அடுத்தக்கட்ட தோ்ச்சியை அளிக்க வேண்டும்.

கரோனா அச்சுறுத்தல் உள்ள சூழலில் தோ்வுகளை நடத்துவது என்பது நியாயமற்றது. மாணவா்கள் மற்றும் கல்வியாளா்களின் குரல்களுக்கு யுஜிசி செவிமடுக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் ராகுல் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையா் ஆய்வு

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT