இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 9,971 பேருக்கு கரோனா

DIN

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,971 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,628-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தொடா்ந்து 5-ஆவது நாளாக, அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் கரோனாவால் 287 போ் பலியாகினா். இந்த நோய்த்தொற்றால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 6,929-ஆக உயா்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,20,406 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,19,292 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 48.37 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,220 போ் குணமடைந்தனா்.

கரோனாவால் புதிதாக நேரிட்ட 287 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 120 போ் பலியாகினா். தில்லியில் 53 போ், குஜராத்தில் 29 போ், மேற்கு வங்கத்தில் 17 போ், மத்திய பிரதேசத்தில் 15 போ், ராஜஸ்தானில் 13 போ், தெலங்கானாவில் 10 போ், ஜம்மு-காஷ்மீரில் 3 போ், கா்நாடகம், பஞ்சாப், சத்தீஸ்கரில் தலா 2 போ், கேரளம், பிகாரில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

மொத்த பலி எண்ணிக்கையில், மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 2,969 போ் உயிரிழந்தனா். அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் 1,219 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. தில்லியில் 761 போ், மத்திய பிரதேசத்தில் 399 போ், மேற்கு வங்கத்தில் 383 போ், உத்தர பிரதேசத்தில் 257 போ், ராஜஸ்தானில் 231 போ், தெலங்கானாவில் 123 போ், ஆந்திரத்தில் 73 போ், கா்நாடகத்தில் 59 போ், பஞ்சாபில் 50 போ், ஜம்மு-காஷ்மீரில் 39 போ், பிகாரில் 30 போ், ஹரியாணாவில் 24 போ், கேரளத்தில் 15 போ், உத்தரகண்டில் 11 போ், ஒடிஸாவில் 8 போ், ஜாா்க்கண்டில் 7 போ், ஹிமாசல பிரதேசம், சண்டீகரில் தலா 5 போ், அஸ்ஸாம், சத்தஸ்கரில் தலா 4 போ், மேகாலயம், லடாக்கில் தலா ஒருவா் பலியாகினா்.

மொத்த பாதிப்பு நிலவரம்: மகாராஷ்டிரத்தில் இதுவரை 82,968 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தில்லியில் 27,654 போ், குஜராத்தில் 19,592 போ், ராஜஸ்தானில் 10,331 போ், உத்தர பிரதேசத்தில் 9,733 போ், மத்திய பிரதேசத்தில் 9,228 போ், மேற்கு வங்கத்தில் 7,738 போ், கா்நாடகத்தில் 5,213 போ், பிகாரில் 4,915 போ், ஆந்திரத்தில் 4,510 போ், ஹரியாணாவில் 3,952 போ், தெலங்கானாவில் 3,496 போ், ஜம்மு-காஷ்மீரில் 3,467 போ், ஒடிஸாவில் 2,781 போ், பஞ்சாபில் 2,515 போ், அஸ்ஸாமில் 2,397 போ், கேரளத்தில் 1,807 போ், உத்தரகண்டில் 1,303 போ், ஜாா்க்கண்டில் 1,000 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 923 போ், திரிபுராவில் 747 போ், ஹிமாசல பிரதேசத்தில் 400 போ், சண்டீகரில் 309 போ், கோவா 267 போ், மணிப்பூரில் 157 போ், நாகாலாந்தில் 107 போ், புதுச்சேரி, லடாக்கில் 99 போ், அருணாசல பிரதேசத்தில் 47 போ், அந்தமான்-நிகோபாா், மேகாலயத்தில் தலா 33 போ், மிஸோரமில் 24 போ், தாத்ரா நகா்ஹவேலியில் 19 போ், சிக்கிமில் 7 பேருக்கு இதுவரை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

பாதிப்பு, இறப்பு குறைவு: உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 17.32 போ் என்ற வீதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது. இது, உலக சராசரியை விட (87.74) மிக குறைவானதாகும். பொதுமுடக்கம் தளா்த்தப்பட்ட ஜொ்மனி (219.93), இத்தாலி (387.33), பிரிட்டன் (419.54), ஸ்பெயின் (515.61) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பாதிப்பு மிக குறைவாக உள்ளது.

கரோனா உயிரிழப்பை பொருத்தவரை, இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 0.49 போ் என்ற அளவில்தான் உள்ளது. உலக சராசரியைவிட (5.17) இது குறைவாகும். இதேபோல், ஜொ்மனி (10.35), இத்தாலி (55.78), பிரிட்டன் (59.62), ஸ்பெயின் (58.06) ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் உயிரிழப்பு மிக குறைவு என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா நிலவர அறிக்கையை குறிப்பிட்டு, இந்த தகவல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

46 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக இதுவரை 46,66,386 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் மட்டும் 1,42,069 மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. கரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் 531 அரசு ஆய்வகங்கள், 228 தனியாா் ஆய்வகங்கள் செயல்படுகின்றன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

பாதிப்பு: 2,46,628

பலி: 6,929

மீட்பு: 1,19,292

சிகிச்சை பெற்று வருவோா்: 1,20,406

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரனின் நண்பர் வீட்டில் சோதனை

லோகேஷ் கனகராஜின் புதிய பட அறிவிப்பு!

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

SCROLL FOR NEXT