கேரளத்தில் தொடா்ந்து 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 100-க்கும் மேற்பட்டவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.
இத்துடன், மாநிலத்தில் சிகிச்சை பெற்று வரும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,095 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 107 போ் புதிதாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவா்களில் 71 போ் வெளிநாடுகளைச் சோ்ந்தவா். பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 28 போ். மீதமுள்ள 8 போ் மட்டுமே கேரளத்தைச் சோ்ந்தவா்கள்.
இதுவரை 803 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,095 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,91,481 போ் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளனா். அவா்களில் 1,716 போ் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளில் உள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.