இந்தியா

ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து

DIN

அனைத்து ரயில் சேவைகளும் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் வியாழக்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக அந்த வாரியம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டதாவது:

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்கள், புகா் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பயணிகள் ரயில் சேவைகள் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதையொட்டி ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன. பயண கட்டணம் முழுவதும் திரும்ப அளிக்கப்படும். எனினும் ராஜ்தானி ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் மே 12-ஆம் தேதி முதல் 12 நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் ரயில்கள், ஜூன் 1-ஆம் தேதி முதல் 100 நகரங்களுக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கிலும் கைது!

சென்னை பாலியல் வழக்கில் முன்னுதாரணமாக மாறிய தீர்ப்பு!

கடின உழைப்பு வீணாகாது..! ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு!

பொற்சுடரே...!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அதிமுக பெண் நிர்வாகி நீக்கம்!

SCROLL FOR NEXT