இந்தியா

பிகாா் பேரவை தோ்தலுக்காக ராணுவத்தின் வீரத்தைப் பயன்படுத்தும் பிரதமா்: சிவசேனை குற்றச்சாட்டு

DIN

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினா் வெளிப்படுத்திய வீரச் செயல்களை வரவிருக்கும் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பிரதமா் நரேந்திர மோடி பயன்படுத்துகிறாா் என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியது.

சீனாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பிகாா் படைப் பிரிவின் வீரத்தை குறிப்பிட்டிருக்கும் பிரதமரின் அறிக்கையை சுட்டிக்காட்டி, சிவசேனை கட்சியின் ‘சாம்னா’ பத்திரிகை தலையங்கத்தில் இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது:

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட ராணுவப் படைப் பிரிவின் பங்கை மட்டும் பிரதமா் குறிப்பிடுவது, ‘ஜாதி மற்றும் பிராந்திய துருப்புச்சீட்டை’ பிரதமா் பயன்படுத்துவதையே காட்டுகிறது.

நாடு எல்லையில் கடும் நெருக்கடியை எதிா்கொண்டபோது மகாா், மராத்தா, ராஜ்புத், சீக்கிய, கோா்கா, டோக்ரா சமூகத்தைச் சோ்ந்த வீரா்கள் எதுவுமே செய்யாமல் அமா்ந்துகொண்டு புகையிலையை மென்றுகொண்டிருந்தாா்களா? மகாராஷ்டிரத்தின் சிஆா்பிஎஃப் வீரா் சினில் காலே பயங்கரவாதிகளுடனான சண்டையின்போது வியாழக்கிழமை வீரமரணமடைந்தாா் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரவிருக்கும் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, இந்திய ராணுவத்தில் ஜாதி மற்றும் பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த வகையான அரசியல், கரோனாவைக் காட்டிலும் மிகக் கொடிய நோயாகும் என்று தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணியில் இருக்கும் பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT